கோவாவில் வீடு வாங்கிய ராஷ்மிகா
ADDED : 1459 days ago
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் விஜய்தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு பிரபலமாகிவிட்டார். தமிழில் சுல்தான் என்ற படத்தில் அறிமுகமானவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனபோதிலும் தெலுங்கு, ஹிந்தியில் பிசியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கிய ராஷ்மிகா அதன்பிறகு ஹிந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பை சென்றபோது அங்கு இன்னொரு வீட்டை வாங்கினார். தற்போது கோவாவிலும் ஒரு வீடு வாங்கியுள்ள ராஷ்மிகா, அந்த வீட்டின் நீச்சல் குளத்திற்கு அருகில் அமைந்துள்ள புத்தர் சிலையுடன் கூடிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.