மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1458 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1458 days ago
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவு குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதி என்கிற நிபந்தனையுடன் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அதேசமயம் கேரளாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது தான் ஓரளவு குறைந்து வருவதால் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம் மற்ற மாநிலங்களை போல 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற நிபந்தனையும் விதித்துள்ளது. ஆனால் இதைவிட ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிபந்தனை என்னவென்றால் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வதற்காக அரசாங்கம் பரிந்துரைத்தபடி 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களை மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு புதிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மட்டுமல்ல, தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதி என்பதே ஒரு வசூலை குறைக்கும் ஒரு நிபந்தனை தான் என்கிற சூழ்நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே படம் பார்க்க அனுமதி என்றால் எந்த அளவிற்கு மக்கள் படம் பார்க்க வருவார்கள், அவர்களில் தடுப்பூசி போட்டவர்களை இனம் கண்டறிந்து தியேட்டருக்குள் அனுமதிப்பது நடைமுறை சாத்தியமா என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிபந்தனையை மட்டும் தளர்த்தும்படி அரசுக்கு கோரிக்கை வைக்க தியேட்டர் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
1458 days ago
1458 days ago