உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொந்த அம்மாவிற்கே மகனாகவும், பேரனாகவும் நடிக்கும் பிரித்விராஜ்

சொந்த அம்மாவிற்கே மகனாகவும், பேரனாகவும் நடிக்கும் பிரித்விராஜ்

மலையாள திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் ஒரு வாரிசு நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவரது தந்தை மறைந்த சுகுமாரனும் ஒரு நடிகர்தான். அதேபோல் அவரது தாயார் மல்லிகா சுகுமாரனும் முன்னாள் கதாநாயகியாக நடித்தவர் தான். ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் மல்லிகா சுகுமாரன். அந்த வகையில் பிரித்விராஜ் தற்போது மோகன்லாலை வைத்து இரண்டாவதாக இயக்கி வரும் ப்ரோ டாடி என்கிற படத்தில் மோகன்லாலின் அம்மாவாக நடிக்கிறார் மல்லிகா சுகுமாரன். அதுமட்டுமல்ல இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரித்விராஜ் அவரது பேரன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் டைரக்சனில் பிரித்விராஜ், நயன்தாரா இணைந்து நடிக்க இருக்கும் கோல்டு என்கிற படத்தில் பிரித்விராஜின் அம்மாவாகவே நடிக்கிறார் மல்லிகா சுகுமாரன். நிஜத்தில் கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் திரையில் தங்களது மகனுக்கு அம்மாவாக நடித்த நிகழ்வுகள் ரொம்பவே குறைவு. அந்த வகையில் முதன்முதலாக அந்த பெருமையை பெற்றுள்ளார் நடிகர் பிரித்விராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !