லிங்குசாமி பட ஹீரோவுக்கு காயம்
ADDED : 1507 days ago
தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து லிங்குசாமி இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. உப்பெனா நாயகி கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாச சித்தூரி தயாரித்து வருகிறார்.
ஆக்சன் காட்சிகளை படமாக்க தயாரானார் லிங்குசாமி. இதற்காக தன்னை தயார்படுத்தும் முயற்சியாக ஜிம்மில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் ராம் பொத்தினேனி. அப்போது அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார் லிங்குசாமி. அவர் உடல்நலம் பெற்று வந்த பிறகுதான் மீண்டும் படப்பிடிப்பை தொடரப் போகிறாராம்.
தற்போது சிகிச்சையில் இருந்து வரும் ராம், இரட்டை ஆற்றலுடன் விரைவில் திரும்பி வருவேன் என தெரிவித்துள்ளார்.