நான் ஒரு சராசரி பெண் என்கிறார் ராஷி கண்ணா
ADDED : 1469 days ago
அரண்மனை-3 படத்தை அடுத்து சர்தார், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வரும் ராசிகண்ணா, சில வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னைப்பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தான் பூஜை செய்வது, விளக்கை ஒளிர செய்வது, காபி அருந்துவது போன்ற விசயங்களை பதிவு செய்திருக்கிறார். அதோடு, நான் ஒரு சராசரி பெண். பிரபல நடிகையாக இருந்தபோதும் ஒரு சாதாரண இந்திய பெண் என்பதே எனக்கு மன அமைதியை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.