மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1458 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1458 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1458 days ago
'பார்ட்டி' என்றாலே பாலிவுட் என்று சொல்லுமளவிற்கு ஹிந்தித் திரையுலகத்தில் அடிக்கடி பார்ட்டிகள் நடக்கும். பிறந்தநாள் பார்ட்டி, சினிமா நிகழ்ச்சிகள் என்றாலே பார்ட்டி என பல பிரபலங்கள் அப்படிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள்.
குடிப்பது, கும்மாளம் அடிப்பது என சமயங்களில் வரம்பு மீறி நடந்த நிகழ்வுகளும் இருக்கின்றன என்கிறது பாலிவுட் வட்டாரம். இரு தினங்களுக்கு முன்பு நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. விசாரணையின் போது ஆர்யன் கதறி அழுததாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாகவே அவர் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார் என்றும் சொல்கிறார்கள். அது பற்றி தெரிந்திருந்தும் ஷாரூக் கான் தனது மகனைத் திருத்த முயற்சிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.
பாலிவுட்டில் போதைப் பொருள் பழக்கம் என்பது இன்று, நேற்றல்ல, பல காலமாகவே இருந்து வருகிறது. 1982ம் ஆண்டிலேயே நடிகர் சஞ்சய் தத் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஐந்து மாதம் சிறையில் இருந்தார்.
கடந்த சில வருடங்களாக பாலிவுட்டில் இந்த போதைப் பொருள் கலாச்சாரம் அதிகமாகப் பரவி வந்திருக்கிறது. தெலுங்கு, கன்னடத் திரையுலகத்திலும் இது பரவி அங்கும் சில நடிகர்கள், நடிகைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகைகள் சஞ்சனா கல்ரானி, ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தனர்.
கடந்த வருடம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு அவரது காதலி ரியா சக்ரவர்த்தி போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். மேலும், பிரீத்திகா சவுகான், பார்தி சிங், ஷபானா சயீத், கபில் ஜாவேரி, அர்மான் கோலி, பர்தீன் கான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அர்மான் கோலிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த சில மாதங்களில் தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்களும் போதைப் பொருள் விவகாரத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இளம் தலைமுறையினரிடம் போதைப் பொருள் விவகாரம் அவர்களது வாழ்க்கையை சீரழித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் போதைப் பொருள் கடத்தலைத் தடுத்து, அதை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1458 days ago
1458 days ago
1458 days ago