மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1457 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1457 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1457 days ago
2 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ படமான வெனம், பெரிய வெற்றியை பெற்றது. அபூர்வமான வைரஸ் ஒன்றால் பாதிக்கப்படும் ஹீரோ திடீரென விஷம் மிக்க கொடிய விநோத மிருகமாக மாறிவிடுவார். தனக்கிருக்கும் இந்த சக்தியை பயன்படுத்தி அவர் எப்படி தீய சக்தியை அழிக்கிறார் என்பதுதான் வெனம் படத்தின் கதை.
தற்போது இதன் இரண்டாம் பாகம் வெனம் : லெட் தேர் க்ரேனஜ் என்ற பெயரில் வெளிவருகிறது. முதல் பாகத்தில் நடித்த டாம் ஹார்டியே இதிலும் வெனமாக நடித்துள்ளார். மைக்கேல் வில்லியம்ஸ், நொமியோ ஹாரிஸ், ரெய்ட் ஸ்காட் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆன்டி செர்க்கிஸ் இயக்கி உள்ளார்.
கடந்த மாதம் வெளியான இந்த படம், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான முதல் வாரத்தில், அமெரிக்க திரையரங்குகளில் 90.1 மில்லியன் டாலர் வசூல் குவித்து, சாதனை படைத்துள்ளது. இது பொதுமுடக்க காலத்திற்கு பிறகு, வெளியான படங்கள் செய்த சாதனையில் மிகப்பெரிய சாதனையாகும்.
இந்த நிலையில் வருகிற 14ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.
1457 days ago
1457 days ago
1457 days ago