மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1455 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1455 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1455 days ago
வில்லன் நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் சனக். சந்தன் ராய் சான்யல், நேகா துபியா இவர்களுடன் பெங்காலி நடிகை ருக்மணி மைத்ரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், கனிஷ்க் வர்மா இயக்கி இருக்கிறார்.
பல மாடி கட்டிடத்தில் இயங்கும் அதி நவீன மருத்துவமனையில் ஒரு ஆபரேஷனுக்காக மனைவியை அட்மிட் செய்து விட்டு அண்டன்டராக இருக்கிறார் ஹீரோ வித்யூத் ஜமால். அந்த மருத்துவமனையை தீவிரவாதிகள் கைப்பற்றி நோயாளிகளை பிணை கைதிகாளாக்குகிறார்கள்.
வெளியில் காவல்துறையினர் பிணை கைதிகளை மீட்க பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, உள்ளே இருக்கும் வித்யூத் ஜமால் தனது அதிரடி ஆக்ஷன் மூலம் தீவிரவாதிகளை அழித்து பிணை கைதிகளை எப்படி விடுவிக்கிறார் என்பது கதை. வருகிற 15ம் தேதியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
படம் குறித்து வித்யூத் ஜமால் கூறியதாவது: இந்த திரைப்படம் கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. அனைவரையும் போல நாங்களும் இப்படத்தின் பணிகளுக்காக சென்றோம். இப்படத்திற்காக கடுமையாக உழைத்து, பணிகளை நிறைவு செய்தோம். நீங்கள் படத்தை பார்க்கும் போது உங்களை பற்றிய படைப்பாகவும், உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு உதவி செய்திடும் உத்வேகத்தையும் அளிக்கும் என நான் உறுதியாக கூறுகிறேன். என்கிறார்.
1455 days ago
1455 days ago
1455 days ago