உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போன் நம்பர் கேட்டவருக்கு அவசர போலீஸ் எண்ணை கொடுத்த ஸ்ருதிஹாசன்

போன் நம்பர் கேட்டவருக்கு அவசர போலீஸ் எண்ணை கொடுத்த ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தனது திறமையால் படிபடியாக முன்னேறி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், 'சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். நடிப்பு, நடனம், பாடகி என பன்முக திறமைக்கொண்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளபக்கத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 100 என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !