உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத்திற்கு ஏ சான்றிதழ்

சூர்யா படத்திற்கு ஏ சான்றிதழ்

சூர்யா தயாரித்து, நடிக்கும் படம் ஜெய் பீம். கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இதில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், லிஜோமோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.

மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

படத்தை தணிக்கைக்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். சூர்யா தயாரிப்பில் வெளியான படங்களில் முதல் ஏ சான்றிதழ் பெற்ற படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !