பிரபாஸின் 25வது படம் ஸ்பிரிட்
ADDED : 1462 days ago
இந்திய அளவிலான நடிகராக உயர்ந்துவிட்ட பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்து, சலார், ஆதி புருஷ் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர நாக் அஸ்வின் படமும் கையில் உள்ளது. இந்நிலையில் இவரின் 25வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இவரின் படத்தை இயக்குகிறார்.
ஸ்பிரிட் என பெயரிடப்பட்டுள்ள இதை டி-சீரிஸ் மற்றும் யுவி கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். அதிரடி ஆக்ஷன் கலந்து போலீஸ் கதையில் இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 8 மொழிகளில் இந்த படத்தை வெளியிட உள்ளனர்.