உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) தம்பதி ஒற்றுமை

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) தம்பதி ஒற்றுமை

இந்த மாதம்  சுக்கிரன் நவ. 22 வரையும்,  புதன் டிச.3  வரையும்  நற்பலன் கொடுப்பர். மாத முற்பகுதியில் சிறப்பான பலன் பெறலாம். புதனால் உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். டிச.3 க்கு பின் புதிய முயற்சியை நிறைவேற்ற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருக்கவும். எதிலும் பொறுமையாகவும், விட்டுக் கொடுத்துப் போகவும்.


குடும்பத்தில் பெண்கள் கை ஓங்கி நிற்கும். அவர்கள் மூலம் எதையும் தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும். கணவர், மனைவி இடையே அன்பு தழைக்கும். தம்பதி ஒற்றுமையுடன் செயல்படுவர். மாத முற்பகுதியில் ஆடம்பர வசதிகள் பெருகும்.  மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் மிக ஆதரவுடன் இருப்பர். சகோதரிகளால் பொன், பொருள் சேரும்.


பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பு அடைவர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சிறப்பான பலன்கள்:

தொழிலதிபர்களுக்கு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். வியாபாரிகள் டிச.3 வரை எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.  சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  ஐ.டி., துறையினர் மாத முற்பகுதியில் மேலதிகாரிகளின் ஆதரவால் முன்னேறுவர்.  பிற்போக்கான நிலை மறையும். வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கப் பெறுவர்.  கலைஞர்கள் பெண்களின் அனுகூலத்தால் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர். விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.

விவசாயிகளுக்கு பாசிப்பயறு, பழவகைகள் போன்றவற்றின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் டிச.3 வரை போட்டிகளில் வெற்றி காணலாம்.

சுமாரான பலன்கள்:

தொழிலதிபர்கள் மாத இறுதியில் சிலர் தரம் தாழ்ந்த நண்பர்களின் சேர்க்கையால் அவப்பெயர் ஏற்படலாம். வியாபாரிகள் டிச.3க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.   அரசு வேலையில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சக ஊழியர்களிடம் கருத்துவேறுபாடு கொள்வர்.  

தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள்  டிச.3 க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும்.


ஐ.டி. துறையினர்  நவ. 22க்கு பின் செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலைக்கு ஆளாகலாம்.
மருத்துவர்கள் வேலையில் ஒரு பிடிப்பு நிலை இல்லாத நிலையை சந்திப்பர்.  
வக்கீல்களுக்கு மாத இறுதியில் மறைமுகப்போட்டியால் பிரச்னைக்கு ஆளாவர்.
ஆசிரியர்கள் எதிர்பாராத செலவை சமாளிக்க முடியாமல் திணறுவர்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் வகையில் செலவு செய்வர்.  
கலைஞர்களுக்கு நவ.22க்கு பிறகு எதிரி தொல்லை குறுக்கிடும்.
விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும்.  
பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு டிச.3க்கு பிறகு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

* நல்ல நாள்: நவ.20, 21,22,23,28,29,30, டிச.1,2,6,7,11,12
* கவன நாள்:  நவ.24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,7
* நிறம்: பச்சை, வெள்ளை

* பரிகாரம்:
●  சனிக்கிழமையில் நவக்கிரக வழிபாடு
●  அதிகாலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !