உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

திண்டுக்கல்: கார்த்திகை பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கினர். கார்த்திகை பிறப்பை முன்னிட்டு, திண்டுக் கல் மலைஅடிவாரம் ஐயப்பன் கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

கணபதி ஹோமம், அபிஷேகம் மற்றும் கொடியேற்றம் நடந்தது. பக்தர்கள் குருசாமியிடம் ஆசிபெற்று சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்தனர். இதை போல் நாகல்நகர் ஐயப்பன் கோயில், வெள்ளை விநாயகர் கோயிலில் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !