நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவிப்பு
ADDED :2186 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் நேற்று (நவம்., 17ல்) அதிகாலை அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.குருசாமிகள் ராதா, சேகர், சிவகுருநாதன் ஆகியோர் 200 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தனர்.
கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் தை மாதம் ஒன்றாம் தேதி வரை 60 நாட்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்குகின்றனர். நேற்று மதியம் (நவம்., 17ல்) அன்னதானம் வழங்குவதை நுகர்வோர் சங்க தலைவர் முருகன் துவக்கி வைத்தார். கோவில் நிர்வாக தலைவர் வைத்திய நாதன் செயலாளர் சாமிபிள்ளை பொருளாளர் தனசேகரன் கல்யாணசுந்தரம், கமலகண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வரசித்தி விநாயகர் கோவிலிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர். அங்கு மதியம் அன்னதானத்தை தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார்.