மங்கலம்பேட்டை கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் குருபூஜை
ADDED :2186 days ago
மங்கலம்பேட்டை: முகாசபரூர் கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நாளை 19ல், குருபூஜை விழா நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் குருபூஜை விழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குருபூஜைவிழா நாளை நடக்கிறது.
இதையொட்டி காலை 5:00 மணிக்கு கோ பூஜை, காலை 6:00 மணிக்கு பால்குட ஊர்வலம், காலை 10:00 மணிக்கு மகா யாகம், காலை 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 2:00 மணிக்கு மாகா தீபாராதனை நடக்கிறது.அதைத்தொடர்ந்து பகல் 12:30 மணிக்கு 108 சாதுக்களுக்கு பாதபூஜை, பகல் 1:30 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது.