உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி சொர்ணாகர்ஷன பைரவர் கோயிலில் பைரவர் ஜெயந்தி வழிபாடு

சீர்காழி சொர்ணாகர்ஷன பைரவர் கோயிலில் பைரவர் ஜெயந்தி வழிபாடு

மயிலாடுதுறை: சீர்காழி சொர்ணாகர்ஷன பைரவர் கோயிலில் பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு  விசேஷ பூஜைகளுடன், சிறப்பு வழிபாடு. ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி தரிசனம்.


மயிலாடுதுறை சீர்காழியில்  சொர்ணாகர்ஷன பைரவர் கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள், திரவிய பொடி பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மகாதீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !