கரூரில், விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED :2187 days ago
கரூர்: கரூரில், ஐயப்ப பக்தர்கள் நேற்று (நவம்., 17ல்) மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர். கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள, ஐயப்பன் கோவிலுக்கு செல்ல, கார்த்திகை மாதம் முதல் நாளில், மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம். கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று (நவம்., 17ல்) காலை, 6:00 மணிக்கு கரூர் ஐயப்ப சேவா சங்க ஐயப்பன் கோவிலில், 100க்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிந்து கொண்டு, விரதத்தை துவக்கினர். முன்னதாக, ஐயப்பன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.