சேலத்தில் சுவாமியே... சரணம் ஐயப்பா! விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
சேலம்: கார்த்திகை மாதம் பிறந்ததால், திரளான பக்தர்கள், சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை முதல் நாளில், ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். அதன்படி, நேற்று 17ல் காலை, சேலத்திலுள்ள பல்வேறு கோவில்களில், பக்தர் கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சிறப்பு பூஜைக்கு பின், மாலை அணிந்தனர். குறிப் பாக, உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலிலுள்ள ஐயப்பனுக்கு, பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு அலங்கார த்தில் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, சபரிமலைக்கு செல்பவர்கள், மாலை அணிந்து, 48 நாள் ஒரு மண்டல விரதத்தை தொடங்கினர்.
மேலும், சன்னதி முன், 18 படி அமைத்து, சிறப்பு படிபூஜை செய்யப்பட்டது. அதேபோல், கடை வீதி ராஜகணபதி, பெங்களூரு பைபாஸ் ஐயப்பா ஆசிரமம், சுகவேனேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர், டவுன் ரயில் ஸ்டேஷன் சாலையிலுள்ள தர்ம சாஸ்தா ஐயப்பா ஆசிரமம், அம்மாபேட்டை குருவாயூரப்பன், சுப்ரமணியர், ஊத்துமலை முருகன், ஆட்டையாம்பட்டி பிள்ளையார், வேலநத்தம் ஆதிவிநாயகர், கை.புதூர் ராஜகணபதி உள்ளிட்ட கோவில்களில், திரளானோர், மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.