உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டியில் விஷ்ணுபதி புண்யகால பூஜை

வீரபாண்டியில் விஷ்ணுபதி புண்யகால பூஜை

வீரபாண்டி: விஷ்ணுபதி கமிட்டி சார்பில், வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசியில், முக்கிய கோவில்களில், விஷ்ணுபதி புண்யகால பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி, கார்த்திகை பிறப்பை யொட்டி, சேலம், புத்தூர் அக்ரஹாரம், சின்னபுத்தூர், சென்றாய பெருமாள் கோவிலில், நேற்று (நவம்., 17ல்), கணபதி யாகத்துடன், விஷ்ணுபதி புண்யகால பூஜை தொடங்கியது.

அதில், 11 கலசங்கள் வைத்து, வீடு கட்டு வதிலுள்ள சிக்கல் தீர வாஸ்து பூஜை, திருமண தடை களை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம், ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மிருத்யுஞ்ஜெய் யாகம், உலக நன்மைக்கு ’மகா சுதர்சன’ யாகம் ஆகியவை நடந்தது. பூஜையில் வைத்த கலசங்களின் புனிதநீரால், மாதேஸ்வரன், பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள், தசாவதார பெருமாள் உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !