உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முறையூர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

முறையூர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

சிங்­கம்­பு­ணரி: சிங்­கம்­பு­ணரி அரு­கே­யுள்ள முறை­யூர் மீனாட்சி சொக்­க­நா­தர் கோயி­லில் கார்த்­திகை முதல் சோம வாரத்தை முன்­னிட்டு 1008 சங்­கா­பி­ஷேக விழா நடை­பெற்­றது. சுந்­த­ரேஸ்­வ­ரர் சன்­னதி முன் தாம­ரை­யில் லிங்க வடி­வில் நெல் பரப்பி 1,008 சங்­கு­கள் வைக்­கப்­பட்டு புனித நீர் ஊற்­றப்­பட்­டது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு இரண்­டாம் கால யாக­சாலை பூஜை­யு­டன் சங்­கா­பி­ஷேக விழா நடை­பெற்­றது. புனித நீர் ஊற்­றப்­பட்ட சங்­கு­களை ஒன்­றன்­பின் ஒன்­றாக சிவாச்­சா­ரி­யார்­கள் சொக்­க­நா­த­ருக்கு அபி­ஷே­கம் செய்து தீபா­ரா­தனை நடத்­தி­னர். அலங்­கா­ரத்­தில் மீனாட்சி சொக்­க­நா­தர் பக்­தர்­க­ளுக்கு காட்சி அளித்­தார்.

மானா­ம­துரை: மானா­ம­துரை ஆனந்­த­வல்லி அம்­மன் கோயி­லில் சோம­வா­ரத்தை முன்­னிட்டு கோயி­லில் சோம­நா­தர் சுவாமி சன்­னதி முன் 108 சங்­கா­பி­ஷே­கம் நடத்­தப்­பட்­டது. ராஜஷே் பட்­டர் உள்­ளிட்ட சிவாச்­சா­ரி­யார்­கள் யாகத்தை நடத்­தி­னர். பூர்­ணா­ஹூதி முடிந்து தீபா­ரா­தனை நடை­பெற்­ற­தும் மூல­வர் சோம­நா­தர் சுவா­மிக்கு சங்­கு­களில் நிரப்பி வைக்­கப்­பட்­டி­ருந்த புனி­த­ நீ­ரால் அபி­ஷே­கம் நடத்­தப்­பட்டு சுவாமி  அலங்­கா­ரத்­தில் எழுந்­த­ருளி அருள்­பா­லித்­தார்.

திருப்புத்துார்: திருப்­புத்­துார் மேலத்­தி­ருத்­த­ளி­நா­தர் கோயி­லில் கார்த்­திகை முதல் திங்­க­ளை­யொட்டி நடந்த முத­லாம் சோம­வா­ரத்தை முன்­னிட்டு மாலை3.30 மணிக்கு யாக­சாலை பூஜை துவங்­கி­யது. தொடர்ந்து 108 சங்­கா­பிஷே­கம் நடந்­தது. சிவாச்­சா­ரி­யர்­க­ளால் சங்­கு­க­ளுக்கு வில்வ இலை­யால் சிறப்பு அர்ச்­சனை நடந்­தது. யாக­வேள்வி பூர்­ணா­கு­திக்கு பின் மூல­வ­ருக்கு அபிஷேக, ஆரா­தனை நடந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !