அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED :2183 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சங்காபிஷேக விழா நடந்தது. அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் சோம வாரத்தை (திங்கட்கிழமை) முன்னிட்டு, சங்காபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, நேற்று, சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.108 வலம்புரி சங்குகளில் புனித நீர் நிரப்பி, யாக பூஜை செய்யப்பட்டது. அதன்பின், அவிநாசியப்பருக்கு, சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில், சிவாச்சார்யார்கள், கூட்டு வழிபாடு நடத்தினர்.இதேபோல், திருப்பூர் விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உட்பட பல சிவாலயங்களில் சங்காபிஷேக பூஜைகள் நடந்தன.