நித்தீஸ்வரன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2256 days ago
காரைக்கால் : காரைக்கால் கோவில்பத்தில் உள்ள நித்யகல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ நித்தீஸ்வரன் கோவிலில் கார்த்திகை மாத சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 1008 சங்குகளுக்கு சிறப்பு ஹோமம், சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. அனைத்து சுவாமிக்கும் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதேபோன்று திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.