புட்டபர்த்தியில் சாய்பாபா ஜெயந்தி விழா துவக்கம்
ADDED :2255 days ago
புட்டபர்த்தி: ஆந்திராவின் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய்பாபாவின் 94ம் ஆண்டு ஜெயந்தி விழா துவங்கியது.
இன்று காலை நடக்கும் சர்வதேச மகளிர் விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை பங்கேற்க உள்ளார். மாலையில் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நவ.20, 21ல் கூட்டு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. நவ.22 மாலை 3:30 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட் 38வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. சாய்பாபா ஜெயந்தி விழா நவ.23 காலை நடக்க உள்ளது. மாலை 5:00 மணிக்கு சுவர்ண ரதோத்ஸவம் நடக்கிறது. நவ.24 மாலை ஸ்ரீ சத்யசாய் இன்டர்நஷேனல் சார்பில் நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.