வீரபாண்டி கார்த்திகை சோமவாரம் கரபுரநாதருக்கு பூஜை
ADDED :2248 days ago
வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தை யொட்டி, அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான சிவாலயங் களில், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமைகளில், சங்காபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்யப்படுவது வழக்கம்.
கார்த்திகை மாதத்தின் முதல் திங்கள்கிழமையான நேற்று (நவம்., 18ல்), உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு கணபதி யாகம், ருத்ரமகா யாகம் செய்து, பூஜையில் வைக்கப்பட்ட புனிதநீரை மூலவர் கரபுரநாதருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.