பெரணமல்லூர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் 508 சங்காபிஷேக பூஜை
ADDED :2170 days ago
பெரணமல்லூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், 508 சங்கா பிஷேகம் நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு, நவகலசம் மற்றும், 508 சங்குகள் வைத்து, வேதபாராயணம் பாடப்பட்டன. உற்சவ மூர்த்திகளுக்கு, கரும்பு சாறு கொண்டு, உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.