உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்தி காட்டும் சின்முத்திரையின் பொருள் என்ன?

தட்சிணாமூர்த்தி காட்டும் சின்முத்திரையின் பொருள் என்ன?

சின் – அறிவு; முத்திரை – அடையாளம். அறிவின் அடையாளம் இது. மனிதனாக  மண்ணில் பிறந்ததன் நோக்கமே மோட்சம் அடைவது தான். ஆனால்  சுகபோகங்களில் இருந்து விலகி, நல்வழிப்படுத்தவே சின்முத்திரையுடன்  அருள்கிறார் சிவன். இந்த முத்திரையில் ஒவ்வொரு விரலுக்கும் தனித்தனி  பொருள் உண்டு.  

* கட்டை விரல்     –    சிவன்
* ஆள்காட்டி விரல்     –     மனிதன்
* நடு விரல்         –    ஆணவம்
* மோதிர விரல்     –     கர்மா (வினை)
* சுண்டு விரல்     –      மாயை

ஆள்காட்டி விரலாகிய மனிதன் ஆணவத்துடன் செயல்பட்டு (கர்மா) உலக  மாயையில் சிக்கு கிறான். இதிலிருந்து விலகி கட்டைவிரலான சிவனைச்  சரணடைந்தால் மோட்சம் கிடைக்கும். இதை உணர்த்தவே தட்சிணாமூர்த்தி  ஆள்காட்டி விரலை மடக்கி, மற்ற விரல்களை நீட்டியபடி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !