வைக்கம் மகாதேவாஷ்டமி: பைரவருக்கு அபிஷேகம்
திருமங்கலம்: காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மகாதேவ வைக்கத்தஷ்டமி பூஜை நடந்தது. மீனாட்சியம்மன், சொக்கநாதர், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை பட்டர் சங்கரநாராயணன் செய்தார். அன்னதானத்தை ஆர்.டி.ஓ., முருகேசன் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள், பணியாளர் தண்டபாணி செய்திருந்தனர்.
திருப்பரங்குன்றம்: மகாதேவ வைக்கத்தஷ்டமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் ஆதி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமான், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் எதிரில் உள்ள மண்டபத்தில் மகாதேவ அஷ்டமி கமிட்டியினர் சார்பில் வேதசிவாகம பாடசாலை மாணவர்களால் சிறப்பு பூஜை முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.