சிவபுரிபட்டி, முறையூரில் பைரவர் பூஜை
ADDED :2284 days ago
சிங்கம்புணரி: சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தனி உடனுறை சுயம்பிரகதிஸ்வரர், சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று வடுக பைரவர் பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு சன்னதி முன் யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பைரவருக்கு 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள கால பைரவருக்கு கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி விழா நடை
பெற்றது. முன்னதாக கால பைரவருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் மஞ்சள், பஞ்சகாவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.