உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி போல பழநியும் மாறும்: அமைச்சர் சீனிவாசன் தகவல்

திருப்பதி போல பழநியும் மாறும்: அமைச்சர் சீனிவாசன் தகவல்

பழநி : பழநி நகரத்தை இன்னும் 6 மாதங்களில் திருப்பதி போல் மாற்றுவேன் என, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

பழநியில் முதல்வரின் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டத்தின்கீழ் ரூ.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் சீனிவாசன், 556 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை வழங்கப்பட்டன. சிறந்த விவசாயியாக தேர்வானவருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. அமைச்சர் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் தி.மு.க.வுக்கு தோல்வியே மிஞ்சும். இன்னும் 6 மாதத்தில் பழநி நகரை திருப்பதிக்கு இணையாக மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காகதான் பழநி கோயிலுக்கு இணை ஆணையராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை நியமித்துள்ளார். பழநி சாலைகளை புதுப்பிக்க ரூ. 48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார். கலெக்டர் விஜயலட்சுமி, பழநி சப்-கலெக்டர் உமா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !