சிவந்திபுரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :4923 days ago
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.வழிபாட்டை முன்னிட்டு அம்பாளுக்கும், சிறப்பு அபிஷேகம், பரிவார தேவைகளுக்கும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து 601 பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் பிரசாத உபயதாரர்கள் ஆவுடையப்பன், ஸ்ரீமதி, சிவசுப்பிரமணியன், ஜோதிடர் முருகன், பகவான்ஜி, சொரிமுத்து ஐயர், வில்லிசை புலவர் வர்ணமணி உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.