உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் இன்று குமரி வருகை!

சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் இன்று குமரி வருகை!

நாகர்கோவில்:சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் இன்று (18ம் தேதி) மாலை குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் வடிவீஸ்வரம் பள்ளத்தெரு ஸ்ரீ சிருங்கேரி மடம் வளாகத்தில் நடக்கும் ஸ்ரீ சாரதா சந்த்ரமவுலீஸ்வர பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக சிருங்கேரி பீடாதிபதி பாரதீய தீர்த்த மகாசுவாமிகள் இன்று (18ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். மாலை 4.30 மணிக்கு களியக்காவிளை வருகிறார். 5.30 மணிக்கு நாகர்கோவில் வருகிறார். 6 மணிக்கு வடிவீஸ்வரம் ஸ்ரீ சிருங்கேரி மடத்தில் பூர்ணகும்ப வரவேற்பு, தூளிபாத பூஜை, வரவேற்பு நன்மடல் ஸமர்ப்பணம் நடக்கிறது. ஜகத்குருவின் அருளுரை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு ஜகத்குரு ஸ்ரீசாரதாசந்த்ரமவுலீஸ்வர பூஜை நடத்துகிறார். நாளை (19ம் தேதி) காலை 7 மணிக்கு பூஜை, 9.30 மணிக்கு ஜகத்குரு மகா சுவாமிகளின் தரிசனம், பழ, புஷ்பசமர்ப்பணம், பாத பூஜைகள், தீர்த்தபிரஸாதம், மந்த்ராக்ஷதை பிரஸாதம், மாலை 4 மணிக்கு ஸ்ரீ ஜகத்குரு மகாஸ்வாமிகள் புறப்பட்டு செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !