குருவாயூர் கோவிலில் செம்பை சங்கீத உற்ஸவம்
ADDED :2169 days ago
பாலக்காடு: கார்த்திகை ஏகாதசி விழாவை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்ஸவம் இன்று துவங்குகிறது.
மேல்பத்துார் கலையரங்கில் காலை 10:00 மணிக்கு கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் துவக்கி வைக்கிறார். மிருதங்க வித்வான் உமயாள்புரம் சிவராமனுக்கு செம்பை நினைவு விருது வழங்கப்படுகிறது. இன்று முதல் டிச. 8 வரை நடக்கும் சங்கீத உற்ஸவத்தில் 3000 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.செம்பை வைத்தியநாத பாகவதர் பயன்படுத்திய தம்புராவுடன் ஊர்வலம் பாலக்காடு அருகே செம்பை கிராமத்தில் இருந்து குருவாயூர் கோவிலுக்கு நேற்று மாலை புறப்பட்டது. தம்புராவை செம்பை வித்யா பீட நிர்வாகிகளிடம் இருந்து குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்கள் பெற்றுகொண்டனர். விழா மேடையில் தம்புரா பிரதிஷ்டை செய்யப்பட்டது.