உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலில் லட்சதீபம்: டிச.10ல் கோலாகலம்

மதுரை மீனாட்சி கோயிலில் லட்சதீபம்: டிச.10ல் கோலாகலம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் டிச., 4 முதல் 13 வரை நடக்கிறது.

இந்நாட்களில் தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, மாலையில் ஆடி வீதியில் வலம் வருவர். டிச.,10 திருக்கார்த்திகையன்று கோயிலில் லட்சதீபம் ஏற்றப்படும். அன்றிரவு 7:00 மணிக்கு அம்மனும், சுவாமியும் கீழமாசிவீதி சென்று, அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகிலும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளுவர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !