திருவண்ணாமலையில் செல்வ வளம் தரும் குபேர கிரிவலம்
ADDED :2172 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை குபேர கிரிவலம் நடக்கிறது. திருவண்ணாமலையில் கடந்த சில ஆண்டுகளாக, குபேர கிரிவலம், பிரபலமாகி வருகிறது. கார்த்திகை, 8ல், குபேரன், கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களில் ஏழாவது லிங்கமாக உள்ள, குபேரலிங்கத்தை வழிபடுவதாக, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி குபேரனுக்கு உகந்த தினமான நாளை மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை, குபேரலிங்கத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் முடிந்து, பின்னர் கிரிவல மலையை வலம் வருவர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.