பழநி மலைக்கோயிலில் பாலாலய முகூர்த்தக்கால்
ADDED :2250 days ago
பழநி,: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் பாலாலயம் பூஜைக்கான முகூர்த்தகால் நேற்று நடப்பட்டது.
பழநி கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக ராஜகோபுரம், கற்சிலைகள், மண்டபத்துாண்கள், சுதைகளை கடந்த நவம்பரில் அறநிலையத்துறை திருப்பணிகுழு ஸ்தபதிகள், பொறியாளர்கள், தொல்லியல் வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.தற்போது கும்பாபிஷேகப்பணிகள் துவங்கி உள்ளன. திருப்பணிகள் துவங்குவதற்கான பாலாலய பூஜை டிச.2 காலை 9:45 முதல் 10:30 க்குள் நடக்கிறது. மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.இணை ஆணையர் ஜெயச்சந்திரபானுரெட்டி, உதவி ஆணையர் செந்தில்குமார் பங்கேற்றனர்.