உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் உற்சவ திருவிழா!

மாரியம்மன் கோவில் உற்சவ திருவிழா!

ஓசூர்: ஓசூர் வசந்த் நகர் ஸ்ரீ கோட்டை மாரியம்மன், சப்பாளம்மன் கோவில் 24ம் ஆண்டு உற்சவ திருவிழா நடந்தது. கடந்த 14ம் தேதி காலை ராம்நகர் ஸ்ரீ கோட்டைமாரியம்மன் கோவிலில் இருந்து காவேரிப்பட்டணம் மாதேஸ் பம்பை குழு புறப்பட்டு வசந்த் நகருக்கு ஊர்வலமாக வந்தது. பக்தர்கள், ஊர்வலத்தில் வந்த கோட்டை மாரியம்மன் வழிப்பட்டு சிறப்ப பூஜைகள் செய்தனர். மாலை 6 மணிக்கு அம்மனுக்கு மஹா தீபராதனையும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. பக்தர்கள், பல்வேறு பூஜை பொருட்களை அம்மனுக்கு படைத்து வழிப்பட்டனர். மறு நாள் 15ம் தேதி காலை உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாலை கோட்டை மாரியம்மனை வழி அனுப்பும் விழா நடந்தது. கவுன்சிலர் நந்தகுமார் தலைமையில் பக்தர்கள் அம்மனை ராம்நகர் கோட்டை மாரியம்மனுக்கு வழியனுப்பினர். இரவு குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !