உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில், நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம்  அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு அபிஷேகம்  நடந்தது. கோயில் ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடி மரம் அருகே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி மற்றும் கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !