உத்திரமேரூர் கோவிலில் உழவாரப்பணி
ADDED :2254 days ago
உத்திரமேரூர்: காஞ்சிபுரம் அப்பர் இறைபணி அறக்கட்டளை அமைப்பினர், உத்திரமேரூர், கைலாசநாதர் சுவாமி கோவிலில், உழவாரப் பணி மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த அப்பர் இறைபணி அறக்கட்டளையினர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், காஞ்சிபுரம் மாவட்ட கோவில்களில், உழவாரப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, நேற்று, உத்திரமேரூர், கைலாசநாதர் சுவாமி கோவிலில், உழவாரப் பணி மேற்கொண்டனர். இதில், கோவில் பிரகாரத்தை துாய்மைப்படுத்தினர். மாலையில், பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.