உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார் : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஓடைகளில் நீர்வரத்து குறைந்ததால், காலை 7:15 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறிது நேரத்தில் லேசான சாரல்மழை பெய்ததால், சுமார் 40 நிமிடம்பக்தர்கள் மலையேறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பகல் 1:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, சாமி தரிசனம் செய்து விட்டு உடனடியாக திரும்பி இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கபட்ட நிலையில், ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து விட்டு, அடிவாரம் திரும்பினர். மற்றவர்கள் கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !