மதகுபட்டி கோயிலில் விஷ்ணு - துளசி திருக்கல்யாணம்
ADDED :2254 days ago
சிவகங்கை : மதகுபட்டி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில் மகாவிஷ்ணு- துளசி திருக்கல்யாணம் நடந்தது. கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு பின் வரும் துவாதசி அன்று நெல்லிமரமாக தோன்றிய மகாவிஷ்ணு, லட்சுமியாகிய துளசியை திருமணம் செய்வதாக ஐதீகம். நேற்று இத்திருநாளில் மதகுபட்டி சிவன் கோயிலில் நெல்லி மரத்திற்கும், துளசி செடிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. காலை 9:30 மணிக்கு யாகபூஜையுடன் கல்யாணம் துவங்கியது. சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். பக்தர்கள் பங்கேற்றனர்.