உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் செல்லும் ரோட்டை அழகுபடுத்த ரூ. 48 கோடி

பழநி முருகன் கோயில் செல்லும் ரோட்டை அழகுபடுத்த ரூ. 48 கோடி

திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலுக்கு செல்லும் ரோட்டை அழகுப்படுத்த ரூ.48 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்கள் மட்டு மின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர் ஆண்டுக்கு ரூ. 100 கோடி வருவாய் ஈட்டி தருகிறது.

திருப்பதி கோயிலுக்கு இணையாக: பழநி முருகன் கோயிலை திருப்பதி கோயிலுக்கு இணை யாக மாற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, மலைக்கோயிலை சுற்றியுள்ள கிரிவல பாதை, முக்கிய ரோடுகளை மலர் செடிகள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்க, நெடுஞ்சாலை துறை ரூ.48 கோடி ஒதுக்கியுள்ளது.

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், இடும்பன் கோயில் மற்றும் கொடைக்கானல் செல்லும் ரோடு வழியே மலைக் கோயிலுக்கு வரும் ரோடு உட்பட 8 ரோடுகளில் 14 கி.மீ.,க்கு சீரமைக்க உள்ளனர்.

மேலும், மூன்று இடங்களில் பக்தர்களை கவர பூங்கா, கோயிலுக்கு செல்லும் ரோடுகளில் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட உள்ளது. விரைவில் பணிகள் துவங்க உள்ளது, என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !