அஷ்டலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED :2181 days ago
திருபுவனை: மிட்டாமண்டகப்பட்டு அஷ்டலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக 6ம் ஆண்டு பூர்த்தி விழா நேற்று நடந்தது.மிட்டாமண்டகப்பட்டு அஷ்டலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஆறாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா கிராம பொதுமக்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை கோ பூஜை, கலச ஸ்தாபனம், அங்குரார்ப்பணம், கலச பூஜை, விசஷே ஹோமங்களை தொடர்ந்து கடம் புறப்பாடாகி, மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.விழா ஏற்பாடுகளை ஆழியூர் முன்னாள் மணியக்காாரர் நாராயணன் குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.