உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் படி பூஜை புக்கிங் 13 ஆண்டுகளுக்கு முடிந்தது!

சபரிமலையில் படி பூஜை புக்கிங் 13 ஆண்டுகளுக்கு முடிந்தது!

சபரிமலை: பக்தர்கள் பயபக்தியுடன் சபரிமலையில், பதினெட்டாம் படியில் பூசை செய்துவரும் படி, பூஜைக்கான புக்கிங் வரம், 2025ம் ஆண்டு வரை முடிந்து விட்டது. அதேபோல், உதயாஸ்தன பூஜை, 2018ம் ஆண்டு வரை புக்கிங் முடிந்து விட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில், உதயாஸ்தன பூஜை மற்றும் படி பூஜை ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக் கடனாக, மிகவும் பயபக்தியுடன் நடத்துவது வழக்கம். இவ்விரு பூஜைகளும் மண்டல மற்றும் மகரஜோதி உற்சவ காலங்களை தவிர, சபரிமலை நடை திறந்திருக்கும் நாட்களில் நடத்தப்படுகிறது.இதற்காக முன்கூட்டியே புக்கிங் செய்வது வழக்கம். அதேபோல், படி பூஜை செய்ய வரும், 2025ம் ஆண்டு வரை அதாவது, 13 ஆண்டுகளுக்கு புக்கிங் முடிந்து விட்டது. இனிமேல் சபரிமலையில் படி பூஜை செய்ய யாராவது விரும்பினால், 2026ம் ஆண்டில், கோவில் நடை திறந்திருக்கும் ஏதாவது ஒரு தேதியில் தான் நடத்த இயலும்.அதேபோல், உதயாஸ்தமன பூஜை (காலை, மதியம், இரவு பூஜைகள்) க்கான புக்கிங் வரும் 2018ம் ஆண்டு வரை, அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முடிந்து விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !