உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சத்ய சாய் ஜெயந்தி விழா

வால்பாறை சத்ய சாய் ஜெயந்தி விழா

வால்பாறை:வால்பாறை சத்ய சாய் சமிதி சார்பில் சாய்பாபா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
வால்பாறை சத்ய சாய் சேவா சமிதி சார்பில், சாய்பாபாவின் பிறந்த நாள் விழா கக்கன்காலனியில் உள்ள கோவிலில் நடைபெற்றது.சமிதி கன்வீனர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பஜன்பாடல்களை பக்தர்கள் பாடி பாபா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !