மேலுார் புரவி எடுப்பு திருவிழா
ADDED :2178 days ago
மேலுார்: மேலுார் தாலுகா உச்சரிச்சான்பட்டியில் மழை பெய்ய வேண்டி வப்பாளி மந்தை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. விழாவையொட்டி நவ., 17 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர்.
இரு நாட்கள் நடக்கும் விழாவின் முதல் நாள் ஊருணி கரையில் இருந்து புரவிகள் மந்தைக்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று மந்தையில் இருந்து அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.