திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு இலவச பால்
ADDED :2242 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்தோறும் பக்தர்களுக்கு இலவச சர்க்கரை பால் வழங்கும் திட்டம் துவங்கியது.
இங்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், அபிஷேகம் செய்யும் பக்தர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் கோயிலிலும் பிரசாதம் வழங்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதாக செவ்வாய்தோறும் அபிஷேக பாலுடன் நாட்டு சர்க்கரை கலந்து வழங்க நிர்வாகம் முடிவு செய்து இன்று முதல் வழங்க துவங்கியது. இது பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.