வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா துவக்கம்!
ADDED :4922 days ago
தேனி: தேனி மாவட்டம், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் விழா, கம்பம் நடுதலுடன் துவங்கியது. கண்ணீஸ்வரமுடையார் கோவில் வளாகத்தில் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்கிருந்து கவுமாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. பக்தர்கள் முல்லையாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி வழிபட்டனர். மே 8 முதல் மே 15 வரை முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவிற்கு மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.