உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர்கள் மலையில் படி கட்டும் பணி

சித்தர்கள் மலையில் படி கட்டும் பணி

சித்தர்கள் மலையில் படி கட்டும் பணி நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் மலைக்கு படிகள் கட்டும் பணி நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் துவங்கி உள்ளது. எஸ். மேட்டுப்பட்டி சித்தர்கள் மலையில் வீரஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இம்மலையில் சமணர் படுகைகள், 600 ஆண்டு பழமையான சிவாலயம், கார்த்திகை தீபம் ஏற்றும் தளம், நீர்ச்சுனைகள் உள்ளன. பழமையான இம்மலை தொல்லியல் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இம்மலைக்குச் சென்று வர பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். மலையில் ஏறிச்செல்ல படிகள், விளக்குகள் அமைக்க வேண்டும் என சித்தர் மகாலிங்க அருளாளர் குழுவினர் வலியுறுத்தினர். நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்னர் அனுமதி பெற்றனர். இதையடுத்து நேற்று படிகள் அமைக்க வாஸ்து பூஜை நடந்தது. வருவாய், ஊரக வளர்ச்சி, வனத்துறையினர் சுற்றுப்புற கிராமத்தினர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !