உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்பிக்கை வையுங்கள்!

நம்பிக்கை வையுங்கள்!

இஸ்ரவேல் மக்கள் ஏதோம் நாட்டைச் சுற்றிப்பார்க்கஇறைவன் உத்தரவுப்படி புறப் பட்டனர். அந்நாடு வனாந்திரமாக காட்சியளித்தது. “காடுபோன்ற இந்த நாட்டில் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது. இதைப் பார்க்கத்தான் ஆண்டவர் எங்களை வரச் சொன்னாரா?” என்று பேசினர். தங்களை இக்காட்டிற்கு வரவழைத்த தேவனை நிந்தித்தனர்.அப்போது, கர்த்தர் அவர்களை சோதிக்கும் விதமாக சிலகொள்ளிவாய் பாம்புகளை அனுப்பினார். அவை மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து கடித்தன. சிலர் இறந்தனர். மக்கள் ஒன்றுகூடி அரண்மனை வாழ்வு வாழ்ந்து பின்பு தன்னை இறைப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட மோசே என்பவரிடம் சென்றனர்.“நாங்கள் கடவுளுக்குவிரோதமாக பேசினோம். இப்போது கஷ்டப்படுகிறோம். இந்த பாம்புகள் எங்களை விட்டு போகும்படியாக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,” என்றனர்.மோசேயும் அவர்களுக்காக பிரார்த்தித்தார். அப்போதுகடவுள், “நீ ஒரு வெண்கலப் பாம்பை செய்து, ஒரு கம்பத்தில் கட்டி வை. அது இறந்துகிடப்பவர்களின் பார்வை இருக்கும் திசை நோக்கி இருக்கட்டும்,” என்றார்.மோசேயும் இறைவன்கட்டளைப்படியே செய்தார். இறந்து கிடந்தவர்கள் உயிரோடு எழுந்தனர்.மக்களோ, இறைவன் தந்த சிறுசோதனையைக் கூடதாங்காமல் அவரை நிந்தித்தனர். மோசேயோ, இறந்தவர்களையும் எழுப்பலாம் என்ற நம்பிக்கையில் ஆண்டவரின் கட்டளையை நிறைவேற்றினார். இப்போது சொல்லுங்கள். ஆண்டவர் மீதான நம்பிக்கை உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது சரியானது தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !