உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி அமாவாசை பூஜை: பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி அமாவாசை பூஜை: பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி ஓடைகளில் நீர்வரத்து குறைந்ததால், அமாவாசை வழிபாட்டிற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.மதுரை - விருதுநகர் மாவட்டங்களின் எல்லையில், சதுரகிரி மலையில், சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. வனப்பகுதியில் பெய்தமழையால், சதுரகிரி மலை ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் சதுரகிரிக்கு செல்ல, மூன்று நாட்களாக, அனுமதி மறுக்கப்பட்டது. அமாவாசை பூஜைக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், நேற்று அதிகாலை முதல், தாணிப்பாறையில் குவிய துவங்கினர். மழை இல்லாததால், தரிசனம் செய்ய, வனத் துறையினரிடம் அனுமதி கோரினர். ஓடைகளில் நீர்வரத்தை ஆய்வு செய்த வனத்துறையினர், காலை, 8:30 மணிக்கு மேல், பக்தர்களின் விபரங்களை பதிவு செய்தபின், மலைக்கு செல்ல அனுமதித்தனர். 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறினர். மதியம், 1:30 மணிக்கு, அமாவாசை பூஜை முடிந்ததும், பக்தர்களை கீழிறங்க கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி, பக்தர்கள் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !